பிரெஞ்சு திரைப்பட ஜாம்பவான் அலைன் டெலோன் காலமானார்
|ஆரம்பக்கால பிரெஞ்சு சினிமாவின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அலைன் டெலோன்.
சென்னை,
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகர் அலைன் டெலோன். இவர் கடந்த 1960-ம் ஆண்டு வெளியான 'பர்பிள் நூன்' அதனைத்தொடர்ந்து, 1967-ம் ஆண்டு வெளியான 'லே சாமுராய்' உள்ளிட்ட கிளாசிக் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றார்.
இவ்வாறு ஆரம்பக்கால பிரெஞ்சு சினிமாவின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அலைன் டெலோன். பின்னர் 2019-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து புற்றுநோயும் தாக்கியது. இவ்வாறு நோயுடன் போராடி வந்த அலைன் டெலோன் தனது 88-வது வயதில் நேற்று காலமானார்.
தனது வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சூழ அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்து, உலகம் முழுவதிலும் உள்ள இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், 'சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து உலகைக் கனவு காண வைத்தவர்' என்று குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.