< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
|15 Oct 2023 12:56 AM IST
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
கன்னியாகுமரி,
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்காக வருகை தந்துள்ளார். அங்கு நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.