< Back
சினிமா செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது ...
சினிமா செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது ...

தினத்தந்தி
|
3 Sept 2023 7:08 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 'கொல்கத்தா தாதா' என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பதும் உண்டு.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை தனதாக்கிய சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கிறார்.

இந்த படத்துக்காக ஆயுஷ்மான் குரானா, ஓரிரு மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள இருக்கிறார். படத்துக்காக கங்குலி போல சில ஷாட்களை அடித்து ஆட கற்றுக்கொள்ள இருப்பதாகவும் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தலைமையிலான படக்குழுவினர் சமீபத்தில் சவுரவ் கங்குலியை சந்தித்து, அவரது வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்த அனுமதியை பெற்றுள்ளனர். மேலும் சவுரவ் கங்குலியை சந்தித்து அவரது எழுச்சி மற்றும் சோதனை காலங்கள் குறித்த விவரங்களை நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் கேட்டு தெரிந்து கொள்ள இருக்கிறாராம்.

இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில், புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்