< Back
சினிமா செய்திகள்
வெளிநாட்டு பயணம்... வைரலாகும் அஜித் புகைப்படங்கள்
சினிமா செய்திகள்

வெளிநாட்டு பயணம்... வைரலாகும் அஜித் புகைப்படங்கள்

தினத்தந்தி
|
18 Feb 2023 10:04 AM IST

அஜித்குமாரின் வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் துணிவு படத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றார். லன்டன், போர்ச்சுக்கல், ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் புகழ்பெற்ற சுற்றுலாப்பகுதிகளை சுற்றிப்பார்த்தார். மக்களோடு மக்களாக சாதாரணமாகவே பயணித்தார். சில இடங்களில் ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்தனர். அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.

இந்தநிலையில் அஜித்குமாரின் வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

ஒரு புகைப்படத்தில் அவரே பெட்ரோல் பங்குக்கு சென்று காருக்கு பெட்ரோல் போடுகிறார். இன்னொரு புகைப்படத்தில் மக்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்லும் பகுதியில் சாலையோர இருக்கை மீது தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.

இன்னொரு வீடியோவில் கார் ஓட்டியபடி சென்றுகொண்டு இருக்கிறார். இந்தப்புகைப்படங்களும் வீடியோவும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்