< Back
சினிமா செய்திகள்
முதல் முறையாக சமந்தா சொன்ன விவாகரத்து காரணம்
சினிமா செய்திகள்

முதல் முறையாக சமந்தா சொன்ன விவாகரத்து காரணம்

தினத்தந்தி
|
5 July 2022 10:35 AM IST

நடிகை சமந்தா தற்போது முதல் தடவையாக விவாகரத்துக்கான காரணத்தை வெளியிட்டு உள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். பிரிவுக்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை. தெலுங்கு வலைதளத்தில் விவாகரத்துக்கு சமந்தாதான் காரணம் என்று தகவல்கள் பரவின. இதை எதிர்த்து சமந்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பானது. விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி காட்சிகளிலும் துணிச்சலாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது முதல் தடவையாக விவாகரத்துக்கான காரணத்தை சமந்தா வெளியிட்டு உள்ளார்.

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சமந்தாவிடம் பிரபல இந்தி டைரக்டர் கரண் ஜோகர் உங்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, ''மகிழ்ச்சியாக இல்லாத வாழ்க்கைக்கு நாம்தான் முழு காரணமாக இருப்போம். நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது வாழ்க்கை கஷ்டமானதாக மாறுகிறது. கபி குஷி கபி கம் என்ற படத்தில் நீங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று காட்டினீர்கள். ஆனால் உண்மையில் அந்த வாழ்க்கை கே.ஜி.எப். படம் போன்று பிரச்சினைகள் நிறைந்ததாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

சமந்தாவின் பதிலை பார்த்து நாகசைதன்யா ரசிகர்கள் வலைதளத்தில் அவரை கண்டித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்