< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சியில் எல்லைமீறும் சமந்தா: புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்
சினிமா செய்திகள்

கவர்ச்சியில் எல்லைமீறும் சமந்தா: புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்

தினத்தந்தி
|
25 March 2024 12:50 AM IST

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

சென்னை

ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக வந்த அவர் பிறகு கொஞ்சம் கவர்ச்சிக்கு இறங்கினார். விவாகரத்து, படங்கள் தோல்வி, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என்று அடுத்தடுத்து ஏற்பட்ட அழுத்தங்களால் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவில் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். விட்டுப்போன பட வாய்ப்புகளை பிடிக்க கடந்த சில நாட்களாகவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தில் கவர்ச்சியில் எல்லை மீறி போஸ் கொடுத்து இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கவும் செய்கின்றனர்.

மேலும் செய்திகள்