< Back
சினிமா செய்திகள்
22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை - கவிஞர் வைரமுத்து வேதனை
சினிமா செய்திகள்

'22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை' - கவிஞர் வைரமுத்து வேதனை

தினத்தந்தி
|
27 Feb 2024 10:29 PM IST

22 ஆண்டுகளாக விருதுக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை யார் சரி செய்வது? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்துவின் 'மகா கவிதை' என்ற நூலுக்கு, தமிழ் பேராயமும், மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் விருது அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த எம்.பி. டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டு, கோலாலம்பூரில் வரும் 8-ந்தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, மகா கவிதை நூலுக்காக கொடுத்து உழைப்பு, வலி போன்றவை இந்த விருதுக்கு முன்பு துச்சம் என்றார். மேலும் 22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், வீட்டில் உள்ள குழாயில் அடைப்பு இருந்தால் சில மணி நேரங்களில் சரி செய்கிறோம், ஆனால் 22 ஆண்டுகளாக விருதுக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை யார் சரி செய்வது? என்று கேள்வி எழுப்பினார்.



மேலும் செய்திகள்