< Back
சினிமா செய்திகள்
மஞ்சு வாரியர் நடிக்கும் புட்டேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

மஞ்சு வாரியர் நடிக்கும் 'புட்டேஜ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 July 2024 9:03 PM IST

மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புட்டேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் லூசிபர் போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ரஜினியின் வேட்டையன், வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 , ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் புட்டேஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் எடிட்டர் சைஜூ ஸ்ரீதரன் இயக்கியிருக்கிறார்.

இதில் மஞ்சு வாரியருடன் இணைந்து விஷக் நாயர், காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 42 வயதில் மஞ்சு வாரியர் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் புட்டேஜ் திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்