< Back
சினிமா செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்...  நிவாரண பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு...!
சினிமா செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்... நிவாரண பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு...!

தினத்தந்தி
|
9 Dec 2023 9:23 AM IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெப்பன் படக்குழு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகை நயன்தாரா, இயக்குனர் பார்த்திபன், சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடித்துள்ள 'வெப்பன்' படக்குழு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் ஸ்டுடியோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

மேலும் செய்திகள்