செம்பன் வினோத், காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் 'அலங்கு' படத்தின் போஸ்டர் வெளியீடு
|‘அலங்கு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களின் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் அடுத்ததாக 'அலங்கு' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சபரிஷ், சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத், சரத் அப்பானி, காளிவெங்கட், குணாநிதி உள்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக 'அலங்கு' திரைப்படம் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Here it's, the Firstlook poster of #ALANGU !!
As the conflict gets bigger, there's no stopping the Mighty Action in chain.
Directed by @DirSPShakthivel
Produced by @DGfilmCompany @MagnasPro @D_Sabareesh_ @SangamAnbu #Chembanvinod @gunanidhi_dg #AlanguTheMovie #MANvsDOG pic.twitter.com/ZCzNCtBxsE