முதல் இடத்தில் சமந்தா
|பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து கருத்து கணிப்பு நடந்துள்ளது. இதில் பிரபலமான 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
தமிழில் தயாராகும் படங்களை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று 'பான் இந்தியா' படங்களாக வெளியிட தொடங்கி உள்ளனர். இதுபோல் இந்தி, தெலுங்கில் தயாராகும் படங்களையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள்.
இந்த பான் இந்தியா படங்களால் நடிகர், நடிகைகள் மொழி எல்லைகளை தாண்டி செல்வாக்கு பெற்று வருகிறார்கள். அனைத்து மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வருகின்றன. இதன் மூலம் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து கருத்து கணிப்பு நடந்துள்ளது. இதில் பிரபலமான 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த சாதனையை சமந்தா ரசிகர்கள் வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். சமந்தாவுக்கு அடுத்த இடங்களில் முறையே அலியாபட், நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், கத்ரினா கைப், பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் உள்ளனர். தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தாவுக்கு 'பேமிலிமேன் 2' வெப் தொடரில் நடித்த பிறகு இந்தி பட வாய்ப்புகளும் வந்தது குறிப்பிடத்தக்கது.