'முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்' - நடிகர் சூரி பதிவு
|நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியைக்காண திரளான ரசிகர்கள் வந்திருந்தனர்.
சென்னை,
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியைக்காண திரளான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும், அந்த போட்டியைக்காண நடிகர் சூரியும் சென்றிருக்கிறார். போட்டியை காண சென்றதை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதனுடன் பதிவிட்ட பதிவில்,
முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்...அற்புதமான ரசிகர்கள்...சென்னை என்றாலே தனி கெத்துதான்...நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்தான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.