சதீஷ் நடித்துள்ள 'வித்தைக்காரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!
|சதீஷ் நடித்துள்ள 'வித்தைக்காரன்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு வி.பி.ஆர். இசையமைத்துள்ளார். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'லைஃப் இஸ் மேஜிக்' என்ற இந்த பாடலை முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டுள்ளனர். கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலை நரேஷ் ஐயர் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.