< Back
சினிமா செய்திகள்
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் - புரோமோக்கு புரோமோ வெளியிட்ட ஜெயிலர் படக்குழு
சினிமா செய்திகள்

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் - புரோமோக்கு புரோமோ வெளியிட்ட 'ஜெயிலர்' படக்குழு

தினத்தந்தி
|
2 July 2023 5:22 PM IST

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'ஜெயிலர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி குறித்த புரோமோ வீடியோ நாளை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பர்ஸ்ட் சிங்கிள் ரெடி. அறிவிப்பு புரோமோ ரெடி. புரோமோக்கு புரோமோவும் ரெடி. ஜெயிலர் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் நாளை வெளியாகும்" என்று புரோமோக்கு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகள்