< Back
சினிமா செய்திகள்
நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!
சினிமா செய்திகள்

'நேசிப்பாயா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

தினத்தந்தி
|
10 Oct 2024 2:24 PM IST

'நேசிப்பாயா' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சென்னை,

2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் 'அறிந்தும் அறியாமலும், பட்டியல்' போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

பின்னர் 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் 'தொலஞ்ச மனசு' எனும் முதல் பாடல் நாளை தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்த பதிவை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்