< Back
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியீடு.!
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

தினத்தந்தி
|
28 Feb 2023 1:07 AM IST

ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'துரோகம்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சாம் சி.எஸ், சிவம் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'அகிலன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்