< Back
சினிமா செய்திகள்
பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சினிமா செய்திகள்

'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தினத்தந்தி
|
19 Feb 2024 4:41 PM IST

'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தில் இயக்குனர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதை என்று ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்குனர் சிவபிரகாஷ் கூறுகையில், '' சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மேலும் செய்திகள்