< Back
சினிமா செய்திகள்
சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
7 Sept 2024 12:56 PM IST

நடிகை சிம்ரன் 'தி லாஸ்ட் ஒன்' என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவர் திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்து விட்டு, இப்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான 'அந்தகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் 'துருவ நட்சத்திரம், வணங்காமுடி, சப்தம்' ஆகிய படங்களை கைவசம் உள்ளார். சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'தி லாஸ்ட் ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளியான 'மை சன் இஸ் கே' என்ற படம் இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'தி லாஸ்ட் ஒன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்