< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பரத் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
|13 April 2024 5:57 AM IST
பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது . இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.