< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

தினத்தந்தி
|
15 Jun 2022 9:48 AM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'வள்ளி மயில்'. இந்த படத்தில் ஃபரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1980-களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்ற கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

திண்டுக்கல்லில் தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து காரைக்குடி, கொடைக்கானல், தேனி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்