< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கவனம் ஈர்க்கும் 'தண்டட்டி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
|15 Feb 2023 9:56 PM IST
ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிக்கும் தண்டட்டி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தண்டட்டி'. இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.
சுவாரசியமான கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பசுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் 'தண்டட்டி' திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.