பரத் நடிக்கும் 'முன்னறிவான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
|நடிகர் பரத் நடிக்கும் 'முன்னறிவான்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை
நடிகர் பரத் மற்றும் நடிகை ஜனனி இணைந்து நடிக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'முன்னறிவான்'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஜயராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கரு.பழனியப்பன், சிங்கம்புலி, சின்னி ஜெயந்த், மிர்ச்சி செந்தில், அசார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எதிர்காலத்தில் நடப்பவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன் ஒருவருக்கு இருந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்டு முன்னறிவான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முன்னறிவான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா மற்றும் விஜய் ஆண்டனி தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.