< Back
சினிமா செய்திகள்
அம்மு அபிராமி நடிக்கும் பெண்டுலம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
சினிமா செய்திகள்

அம்மு அபிராமி நடிக்கும் 'பெண்டுலம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

தினத்தந்தி
|
23 Oct 2022 4:29 PM IST

நடிகை அம்மு அபிராமி நடிக்கும் 'பெண்டுலம்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகை அம்மு அபிராமி தற்போது சைக்கலாஜிக்கல், பேன்டசி திரில்லர் திரைப்படம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'பெண்டுலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 'பெண்டுலம்' திரைப்படத்தை இயக்குனர் சதீஷ் குமரன் இயக்குகிறார்.

இந்த படத்தில் அம்மு அபிராமி, கோமல் சர்மா, ஸ்ரீபதி, ஸ்ரீ குமார், டி.எஸ்.கே., விஜித், ராம் ஜூனியர் எம்.ஜி.ஆர், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் கஜராஜ், சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கிறார். சென்னை, தலக்கோணம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்