< Back
சினிமா செய்திகள்
பிரஜின் நடிக்கும் டி 3 படத்தின் பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வெளியீடு..!
சினிமா செய்திகள்

பிரஜின் நடிக்கும் 'டி 3' படத்தின் பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வெளியீடு..!

தினத்தந்தி
|
28 July 2022 9:19 PM IST

பிரஜின் நடித்துள்ள 'டி 3' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'டி 3'. இந்த படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரே நாளில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது 'டி 3' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்