< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம்
சினிமா செய்திகள்

நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம்

தினத்தந்தி
|
26 Sept 2022 1:37 PM IST

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் கதை அடங்கிய திருமண வீடியோ ஆவணப்பட பாணியில் விரிவாக வெளியாக உள்ளது.

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி திரை உலக நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்தினர். முழு திருமண நிகழ்ச்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் ஓ.டி.டி.யில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து இருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இந்த இடத்துக்கு உயர்ந்தேன் என்று விளக்கும் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் ஆவணப்படத்தில் இடம் பெறுகின்றன. நயன்தாரா குறித்து மற்றவர்கள் பேசும் பேட்டிகளும் இடம்பெறுகின்றன. அதோடு திருமண புகைப்படம் மற்றும் வீடியோவையும் ஆவணப்படத்தில் இணைத்து இருக்கிறார்கள். தற்போது இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் நயன்தாரா தன்னை சாதாரண பெண் என்று கூறுகிறார்.

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

மேலும் செய்திகள்