< Back
சினிமா செய்திகள்
வெப் தொடரில் வாணி போஜன்
சினிமா செய்திகள்

வெப் தொடரில் வாணி போஜன்

தினத்தந்தி
|
20 March 2023 3:39 PM IST

வாணி போஜன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்றது.

தமிழில் 'ஓ மை கடவுளே', 'லாக்கப்', 'மிரள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வாணி போஜன் தற்போது 'செங்களம்' என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி, ஷாலி, மானஷா, வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்டு செய்துள்ளார். தரண் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரசியல் திரில்லர் கதையம்சம் கொண்ட தொடராக தயாராகி உள்ளது.

திகில் தொடரில் நடித்தது குறித்து, வாணி போஜன் கூறும்போது, "இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் சொன்ன கதை பிடித்தது. ஆனால் இடையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இப்போது பார்க்கும்போது நான் ஒரு நல்ல படைப்பில் நடித்து இருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

மேலும் செய்திகள்