< Back
சினிமா செய்திகள்
விஜய்க்கு போட்டியாக வரும் படங்கள்
சினிமா செய்திகள்

விஜய்க்கு போட்டியாக வரும் படங்கள்

தினத்தந்தி
|
28 Oct 2022 10:08 AM IST

பொங்கலுக்கு வெளிவர இருக்கும் விஜய்யின் வாரிசு படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் போட்டியாக படங்கள் வெளிவருகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் விஜய்யின் வாரிசு படம் காதல், சென்டிமெண்ட், அதிரடி சண்டை நிறைந்த குடும்ப கதை. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பதாலும், தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்குவதாலும், தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. இந்த படத்தின் மூலம் இருவரும் தமிழ் திரையுலகில் காலூன்றும் ஆசையில் உள்ளனர். படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வருவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் வாரிசுக்கு போட்டியாக அஜித்குமாரின் `துணிவு' படமும் பொங்கலுக்கு வருகிறது.

இதனால் தமிழத்தில் உள்ள தியேட்டர்களை இரண்டு படங்களும் பிரித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாரிசு தெலுங்கு பதிப்பை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக தியேட்டர்களில் திரையிட்டு நிறைய லாபம் பார்க்கலாம் என்று காத்திருந்த தில்ராஜுவுக்கு அங்கேயும் சிக்கல் உள்ளது. பிரபாஸ் நடிக்கும் `ஆதிபுருஷ்' மற்றும் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்களையும் பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் உள்ளனர். இந்த சவால்களையும் மீறி `வாரிசு' வசூலில் சக்கைப்போடு போடும் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். வாரிசு திரைக்கு வரும் முன்பே வெளிநாட்டு உரிமை, இந்தி டப்பிங் உரிமை, ஆடியோ உரிமை போன்றவை ரூ.150 கோடிக்கு மேல் விலைபோய் உள்ளதாக தகவல்.

மேலும் செய்திகள்