< Back
சினிமா செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

கோப்புப்படம்

சினிமா செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

தினத்தந்தி
|
2 Oct 2023 11:54 PM IST

உடல்நலக்குறைவு காரணமாக திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை (59) இன்றிரவு காலமானார்.

சென்னை,

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான வி.ஏ.துரை இன்றிரவு சென்னையில் அவரது வீட்டில் காலமானர்.

முன்னதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டதை அறிந்து, நடிகர் பலரும் அவருக்கு உதவி செய்தனர்.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார். ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

இவரது தயாரிப்பில் விக்ரம் – சூர்யா நடித்து 2003-ம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்