< Back
சினிமா செய்திகள்
கருப்பு பணத்தில் படம் எடுக்கிறேனா? - நடிகர் பிருதிவிராஜ் காட்டம்
சினிமா செய்திகள்

கருப்பு பணத்தில் படம் எடுக்கிறேனா? - நடிகர் பிருதிவிராஜ் காட்டம்

தினத்தந்தி
|
13 May 2023 1:13 AM GMT

தமிழில் மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, கண்ணா மூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருதிவிராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். சில படங்களை டைரக்டு செய்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மலையாள யூ டீயூப் சேனல் ஒன்றில், பிருதிவிராஜ் குறித்து சர்ச்சை கருத்து வெளியானது. அதில் வெளியான தகவலில் "மலையாள திரையுலகில் 5 தயாரிப்பாளர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பெற்ற கருப்பு பணத்தை மலையாள திரையுலகில் புழக்கத்தில் விடுகின்றனர். அதில் ஒருவர் பிருதிவிராஜ். முறைகேட்டில் சிக்கியதற்காக இவர் ரூ.25 கோடி அபராதம் செலுத்தி இருக்கிறார்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு பிருதிவிராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "பொதுவாக இதுபோன்று வெளியாகும் விஷயங்களை கண்டு கொள்ளாமல் நான் கடந்து சென்று விடுவேன். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. நான் அபராதம் எதுவும் கட்டவில்லை. எனக்கு எதிரான இந்த வரம்பு மீறிய பொய்யான தகவலை வெளியிட்டதற்காக சட்டரீதியாக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்