'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
|ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சென்னை,
கோலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருத்திகா உதயநிதி. கோலிவுட்டில் 'வணக்கம் சென்னை' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய திரைப்படம் தான் 'காதலிக்க நேரமில்லை'.
இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. சமீபத்தில், காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலிருந்து முதல் கிளிம்ப்ஸ் வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், நேற்று ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு 'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் ஜெயம் ரவிக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.