< Back
சினிமா செய்திகள்
சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
சினிமா செய்திகள்

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

தினத்தந்தி
|
6 March 2023 8:37 PM IST

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'பத்து தல' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பத்து தல' திரைப்படம் வருகிற மார்ச் 30-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்