< Back
சினிமா செய்திகள்
ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் பி.டி.சார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'பி.டி.சார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
21 Feb 2024 10:00 AM IST

'பி.டி.சார்' படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'பி.டி.சார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

இந்த படத்தில் கஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது.

இந்த நிலையில், 'பி.டி.சார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள படக்குழு, படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்