< Back
சினிமா செய்திகள்
7 பிலிம் பேர் விருதுகளை வென்ற சித்தா திரைப்படம்
சினிமா செய்திகள்

7 பிலிம் பேர் விருதுகளை வென்ற 'சித்தா' திரைப்படம்

தினத்தந்தி
|
4 Aug 2024 8:15 PM IST

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் மொத்தம் 7 பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளது.

ஐதராபாத்,

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம் 'சித்தா'. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான இப்படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார். படத்தின் பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணனும், பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் அமைத்திருந்தனர். குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய உனக்கு தான் போன்ற பாடல் மிகப் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.

சித்தா திரைப்படம் மொத்தம் 7 பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை - அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் - எஸ்.யூ அருண் குமார் ஆகிய 7 பிரிவுகளில் படத்துக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பிலிம் பேர் விருதுடன் சித்தார்த் இருக்கும் அவரது வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்தியத் திரையுலகத்திற்கான 69வது பிலிம் பேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்