< Back
சினிமா செய்திகள்
படமாகும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்
சினிமா செய்திகள்

படமாகும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்

தினத்தந்தி
|
5 May 2023 10:35 AM IST

பெண்களுக்கு எதிராக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து புதிய படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்கு `இங்கு மிருகங்கள் வாழும் இடம்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பைன்ஜான், அஸ்மிதா, ஶ்ரீதேவி உன்னிகிருஷ்ணன், சேரன் ராஜ், கோலிசோடா ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு எஸ்.சசி குமார் திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். பைன்ஜான் பிக்ஸர்ஸ் சார்பில் ஜே.அஜரா பேகம் தயாரிக்கிறார். இசை: வித்யா ஷரண், ஒளிப்பதிவு: சிவ பாஸ்கரன். சென்னை மற்றும் திருச்சியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தப் படத் தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்