திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல்
|தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, வேட்புமனுக்கள் நாளை 23-ந்தேதி முதல் 26ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் . 27-ம் தேதி காலை 11.00 மணி முதல் 2-ம் தேதி மாலை மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் . 2-ம் தேதி அன்றே வேட்புமனு பரிசீலனையும், 3 முதல் 5-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 5-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு மார்ச் 26-ம் தேதி காலை வாக்குப்பதிவும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.