< Back
சினிமா செய்திகள்
சுந்தர்.சி உதவியாளர் இயக்கும் படம்
சினிமா செய்திகள்

சுந்தர்.சி உதவியாளர் இயக்கும் படம்

தினத்தந்தி
|
27 Jan 2023 11:53 AM IST

சுந்தர்.சியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வி.எம்.ரத்னவேல் எழுதி டைரக்டு செய்துள்ள படம் ``தலைக்கவசமும் 4 நண்பர்களும்''.

``தலைக்கவசமும் 4 நண்பர்களும்'' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர்.சியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வி.எம்.ரத்னவேல் எழுதி டைரக்டு செய்துள்ளார். இதில் கதாநாயகனாக ஆனந்த்நாக் மற்றும் அவருடைய நண்பர் களாக புது முகம் ராஜேஷ், ஶ்ரீஜித், விக்கிபீமா ஆகியோர் நடித்துள்ளனர், கதாநாயகிகளாக ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா நடித்துள்ளனர். ஓ.ஏ.கே சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசைராஜேந்திரன், மணிமாறன், சுப்புராஜ், செந்தில்குமாரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் வி.எம்.ரத்னவேல் கூறும்போது, ``இளைஞர்கள் நினைத்தால் சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் உருவாக்க முடியும் என்ற பொதுநல கருத்தை மையமாக கொண்டு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது'' என்றார். ஒளிப் பதிவு: சீனு ஆதித்யா, இசை: ராஜ் பிரதாப்.

மேலும் செய்திகள்