திரைப்பட வளர்ச்சி கழக பொறுப்பு: நடிகை பார்வதி நீக்கம்
|கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் குழுவில் இருந்து நடிகை பார்வதியை கேரள அரசு நீக்கி உள்ளது
தமிழில் 'பூ', 'சென்னையில் ஒருநாள்', 'மரியான்', 'பெங்களூர் நாட்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் குழுவிலும் இடம்பெற்று இருந்தார்.
திரைப்பட வளர்ச்சி கழகத்தின் செயல்பாடுகளை சமீபகாலமாக பார்வதி விமர்சித்து வந்தார். திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் பார்வதியை திரைப்பட வளர்ச்சி கழக இயக்குனர் குழு பொறுப்பில் இருந்து நீக்கக்கோரி மலையாள திரை பிரபலங்கள் பலர் வலியுறுத்தி இருந்தனர். பார்வதியும் அந்த பொறுப்பில் தொடர்ந்து செயல்பட தனக்கு விருப்பமில்லை என்றும், உடனடியாக தன்னை நீக்கும்படியும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் குழுவில் இருந்து நடிகை பார்வதியை கேரள அரசு நீக்கி உள்ளது. கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் வாரிய உறுப்பினர்களான ஷங்கர் மோகன் மற்றும் நடிகை மாலா பார்வதி ஆகியோர் கடந்த மாதம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.