< Back
சினிமா செய்திகள்
காதலித்ததால் சினிமா வாழ்க்கை நாசமானது - விஜய் பட நடிகை வருத்தம்
சினிமா செய்திகள்

காதலித்ததால் சினிமா வாழ்க்கை நாசமானது - விஜய் பட நடிகை வருத்தம்

தினத்தந்தி
|
7 July 2023 1:21 PM IST

தமிழில் விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்தவர் அமீஷா படேல். இவர் 23 வருடங்களுக்கு முன்பு 'கஹோனா பியார் ஹே' என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்து இருந்தார். படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.

அதே வருடம் தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக பத்ரி என்ற படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்த நிலையில் இந்தி டைரக்டர் விக்ரம் பட்டுவை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. காதலும் முறிந்து விட்டது.

அமீஷா படேல் தற்போது அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் நேர்மைக்கு இடம் இல்லை. டைரக்டர் விக்ரம் பட்டுவை காதலிப்பதாக நான் வெளியில் சொன்னதால் 13 ஆண்டுகளாக எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கையே நாசமாகி விட்டது. என் வாழ்க்கையில் இன்னொருவருக்கு இடம் அளிக்கவில்லை.

இப்போது மன அமைதி மட்டுமே என்னோடு இருக்கிறது. வாழ்க்கையில் வேறு எதுவும் எனக்கு தேவை இல்லை'' என்றார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீஷா படேல் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மேலும் செய்திகள்