< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
தீபாவளி பண்டிகை; தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்...!

12 Nov 2023 10:42 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.