< Back
சினிமா செய்திகள்
அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்க நல்ல பையனா பாருங்கள் ரசிகைக்கு ஷாருக்கான் அட்வைஸ்
சினிமா செய்திகள்

"அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்க நல்ல பையனா பாருங்கள்" ரசிகைக்கு ஷாருக்கான் அட்வைஸ்

தினத்தந்தி
|
10 Feb 2023 3:38 PM IST

படத்தை புறக்கணிக்க ஒரு குழுவினர் சமூகவலைதளத்தில் பிரசாரம் செய்தனர். அதையும் முறியடித்து ஷாருக்கான் வசூலில் சாதனை படைத்து உள்ளது. .

ம்பை

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.900 கோடியை வசூலித்துள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி பிகினியில் ஆட்டம் போட்டது பயங்கரமான சர்ச்சையானது. இதனால் படத்தை புறக்கணிக்க ஒரு குழுவினர் சமூகவலைதளத்தில் பிரசாரம் செய்தனர். அதையும் முறியடித்து ஷாருக்கான் வசூலில் சாதனைபடைத்து உள்ளது. .

பதான் படத்தை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் ஷாருக்கானை டுவீட் செய்து வருகின்றனர். அவர்களில் ஒரு ரசிகை, ஷாருக்கானுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என டுவீட் செய்திருந்தார்.



அவர் டுவிட்டில் "நான் உங்களை திருமணம் செய்துகொள்ள கேட்கவில்லை. ஆனால் காதலர் தினத்தன்று உங்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம்?" எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள ஷாருக்கான், "நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்கள் நல்ல பையனுடன் சேர்ந்து பதான் படத்தை பாருங்கள்" என்று ஜாலியாக கூறியுள்ளார். ரசிகையின் ட்விட்டர் பதிவுக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான், பதான் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு தொடர்ந்து நன்றி கூறி டுவீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதான் திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்