தமிழில் வெளியாகும் 'ஏலியன்: ரோமுலஸ்' ஹாரர் படம்
|மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரர் படமான 'ஏலியன்: ரோமுலஸ்' தமிழில் வெளியாக உள்ளது.
சென்னை,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் 'ஏலியன்: ரோமுலஸ்'. இந்த படத்தினை 'ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்' படங்களை இயக்கிய பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த படத்தினை டிவென்டியத் செஞ்சுரி ஸ்டுடியோ நிறுவனம், இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்த படம் வருகிற 16-ந் தேதி அமெரிக்க திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் பின்னரே, இந்தியாவில் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த ஹாரர் திரைப்படம் ரசிகர்களுக்கு திகிலுட்டும் அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.