பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் - நடிகை ரம்பா
|திருமணத்துக்கு பிறகு நடிகை ரம்பா கணவருடன் கனடாவில் குடியேறினார்.
1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அருணாசலம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, என்றென்றும் காதல், மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு கணவருடன் கனடாவில் குடியேறினார். சமீபத்தில் சென்னையில் நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்தார்.
இந்த நிலையில் ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் சினிமாவில் பல முன்னனி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது. நான் நடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன்'' என்றார்.