தந்தையர் தின வாழ்த்து: 'லவ் யூ அப்பா'...ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவு
|டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அன்னையர் தினம், மகளிர் தினம் கொண்டாடப்படுவதை போல தந்தையர் தினம் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை. ஆனால், சமீப காலமாக மகள்கள் தந்தையர் தினத்தை பெரிதாக கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இறுதியாக வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்படம், இன்றும் ஓடிடியில் வெளியாகவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்திற்குத் தயாராகி வருகிறார். இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் "என் இதயத்துடிப்பு.. என் எல்லாமும்.. லவ் யூ அப்பா" என ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இப்படங்களைப் பார்த்த நடிகை ஸ்ரேயா ரெட்டி, "எனக்கு மிகவும் பிடித்த மனிதர்கள்' என கமெண்ட் செய்துள்ளார்.
இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பயோபிக்கை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.