< Back
சினிமா செய்திகள்
மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் படத்திற்கு ரசிகர்கள் அஞ்சலி
சினிமா செய்திகள்

மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் படத்திற்கு ரசிகர்கள் அஞ்சலி

தினத்தந்தி
|
23 Sept 2024 3:55 PM IST

மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக 1980 மற்றும் 90களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வலம்வந்த நடிகை சில்க் சுமிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் வலம் வந்தார்.

திரையுலகில் 18 ஆண்டுகளில் மட்டும் அவர் மொத்தமாக 450 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தார். கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி, பின்னாளில் சில்க் சுமிதா (Actress Silk Smitha) என்று அழைக்கப்பட்டார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எலுரு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர், இயக்குனர் வினு சக்கரவர்த்தியின் மூலமாக திரைப்படத்தில் பாடலில் நடனம் ஒன்றில் தோன்றி பின் வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியான வேடங்களையும் அன்றைய நாட்களில் தையரியமாக ஏற்று நடித்ததால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டானது. தென்னிந்தியாவின் காந்தக்கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த 22 செப்டம்பர் 1996 -ம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, முதல் நாள் இரவில் தனது தோழிக்கு தொடர்பு கொண்டு முக்கியமான விஷயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதால் விரைந்து கிளம்பி வருமாறும் கூறிய நிலையில், மறுநாள் காலையில் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை முடிவில் அவர் அதிகளவு மதுபானம் அருந்தியதால், போதையில் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த மர்மம் நீடித்து வருகிறது. இந்தநிலையில், நடிகை சில்க் சுமிதாவின் நினைவு நாளான இன்று, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் சில்க் சுமிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, தங்களது அஞ்சலியை செலுத்தினர். மேலும், ஆதரவற்றோர் 25 பேருக்கு அவர்கள் உணவு வழங்கி நலத்திட்ட பணிகளை செய்தனர். டிக்கடை வைத்திருக்கும் இவர், தனது கடை முழுவதும் நடிகையில் புகைப்படங்களால அலங்கரித்துள்ளார். சில்க் சுமிதாவின் பிறந்தநாளுக்கும் நினைவும் நாளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்