< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
உடையை பார்த்து கீர்த்தி சுரேஷை கேலி செய்த ரசிகர்கள்
|4 Feb 2023 8:59 AM IST
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடையை ரசிகர்கள் கேலி செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசின் திருமண வதந்தி சமீபத்தில் அடங்கியது.
இந்த நிலையில் புதிதாக ஒரு ஆடை உடுத்தி ரசிகர்களின் கேலி, விமர்சனங்களில் சிக்கி உள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த ரங்குதே என்ற தெலுங்கு படத்தை டைரக்டு செய்த அட்லூரி சில தினங்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடை விவாத பொருளாக மாறி உள்ளது. அந்த உடை பல வண்ணங்களில் இருந்தது.
அதைப்பார்த்த ரசிகர்கள் பந்தலுக்கு போடும் சாமியானாவை கிழித்து ஆடையாக தைத்து உடுத்தி இருப்பதாக கேலி செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். சாமியானா பேபி என்று பெயர் வைத்தும் சிலர் கலாய்த்துள்ளனர்.