சினிமாவில் புதுமையை எதிர்பார்க்கும் ரசிகர்கள் - நடிகை டாப்சி
|தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த டாப்சி தற்போது இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். பத்லா, பேபி, நாம் ஷபானா, சபாஷ் மிது போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி இந்தி பட உலகில் தனது மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார்.
இந்த நிலையில் டாப்சி அளித்துள்ள பேட்டியில், 'ரசிகர்கள் சினிமாவில் தினமும் புதுமையை எதிர்பார்க்கிறார்கள். நான் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இது என்னை நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன் என்ற பெயரை காப்பாற்றிக்கொண்டே நடிப்பு பயணத்தை நீட்டித்துக்கொண்டிருக்கிறேன்.
எல்லா நேரத்திலும் ரசிகர்களை திருப்திப்படுத்துவது சாத்தியம் இல்லை. ஒவ்வொரு முறையும் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாவிட்டாலும் கூட வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்ற எனது எண்ணத்தில் மட்டும் மாற்றமில்லை' என்றார்.
தற்போது ஏலியன், ஓ லடிக்கி ஹை காஹான், பிர் ஆயே ஹாஸின், தில் ரூபா, ஜன கன மன மற்றும் ஷாருக்கான் ஜோடியாக டம்கி போன்ற படங்கள் டாப்சியின் கைவசம் உள்ளன.