'சினிமாவின் மறுமலர்ச்சிக்கான சாவி ரசிகர்களிடம் உள்ளது - நடிகை தன்யா ராம்குமார்
|சினிமாவின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நடிகை தன்யா ராம்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
கன்னட சினிமாவில் நடித்து வருபவர் தன்யா ராம்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான நின்னா சனிஹேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். இந்நிலையில்,கன்னட சினிமாவின் மறுமலர்ச்சிக்கு ரசிகர்களின் பங்கு முக்கியம் என்று நடிகை தன்யா ராம்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'தென்னிந்திய ரசிகர்களிடம் ஒரு பண்பு உள்ளது. அவர்கள் தனக்கு பிடித்த நடிகர்/நடிகைகள் மீது அதிகமாக அன்பு செலுத்துகிறார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு முக்கியம். மேலும்,கன்னட சினிமாவின் மறுமலர்ச்சிக்கான சாவி அவர்களிடம்தான் உள்ளது.
சில தனித்துவம் வாய்ந்த கதைகளை கொண்டு படங்கள் வருகின்றன. ஆனால், அது போதுமான அளவு ரசிகர்களை படத்துடன் இணைக்க தவறுகின்றன என நினைக்கிறேன். ரசிகர்கள் விரும்பும் விதத்தில் படங்களை எடுத்து அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சினிமாத்துறை முயற்சி செய்யவேண்டும். அவ்வாறு வரும் நல்ல படங்களை திரையரங்கிற்கு சென்று மக்கள் ஆதரிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்களை கேம் சேஞ்சர் என்பேன். நான் இந்தளவிற்கு ரசிகர்களை சென்றடைய அதுவும் ஒரு காரணம். சில சமயங்களில் அது நம்மை கெட்ட விஷயங்களையும் சந்திக்க வைக்கும்,' என்றார்.