< Back
சினிமா செய்திகள்
கேரளாவில் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய்
சினிமா செய்திகள்

கேரளாவில் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய்

தினத்தந்தி
|
19 March 2024 8:53 PM IST

'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை கேரளாவில் எடுக்க உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று கேரளாவிற்கு நடிகர் விஜய் சென்றார். கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான 'காவலன்' படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு கேரளா சென்றார். நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதனால் விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே இன்று ரசிகர்கள் குவிந்தனர்.தொடர்ந்து அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்தார். இதையடுத்து ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்