இயக்குனர் பா.ரஞ்சித்தை விமர்சிக்கும் ரசிகர்கள்...காரணம் என்ன?
|பா.ரஞ்சித் செய்த செயல் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
சென்னை,
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் கபாலி. இது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக படக்குழுவினர் கூறினர். அடுத்ததாக 'காலா' படத்தில் இருவரும் இணைந்தனர். கபாலியை விட சிறிது கமர்சியலாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும், திரைப்படம் பெரிதான வரவேற்பை பெறவில்லை.
ஆனால், இந்த படங்கள் பா.ரஞ்சித்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கின. இவர் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்குகிறார். இந்நிலையில், பா. ரஞ்சித் செய்த செயல் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அரசியல் தொடர்பாக நடந்த விவாதத்தில் பா.ரஞ்சித்திடம் எதிர் தரப்பில் இருந்த ஒருவர் நீங்கள் உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லி விட்டீர்கள். அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து கைத்தட்டினார்கள்.
ரஞ்சித்தும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிரித்தார். அவரது இந்த செயல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன், இயக்குனர் பா.ரஞ்சித்தை ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.