< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகை மாளவிகா மோகனன் நீச்சல் உடை புகைப்படம் கேட்ட ரசிகர்
|26 Jun 2022 3:00 PM IST
நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ரசிகர் ஒருவர், உங்களின் பிகினி போட்டோவை பதிவிடுங்கள் என சொல்லி கேட்டுள்ளார்.இதற்கு போட்டோ மூலமே பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.
'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்' போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களிலும் இவர் மிக பிரபலம். பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் ஆன்லைனில் அவர் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், 'உங்களது கடைசி பிகினி (நீச்சல் உடை) புகைப்படத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று கேட்டார். அதற்கு தனது நீச்சல் உடைகளை புகைப்படம் எடுத்து அந்த ரசிகருக்கு அவர் அனுப்பினார்.
'இது போதுமா இன்னும் வேறு ஏதாவது வேண்டுமா?' என்றும் மாளவிகா மோகனன் அந்த ரசிகருக்கு பதில் அனுப்பியுள்ளார்.